குஷ்பு குமரி அல்ல கிழவி! இளங்கோவன் மட்டும் தான் குஷ்பு சொல்வதை கேட்பார்! தெறிக்கவிட்ட செல்லூர் ராஜூ!

இளங்கோவனுக்கு ஆதரவாக தேனி தொகுதிக்குப் பிரசாரம் செய்வதற்கு முன்வந்தார் குஷ்பு.


தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த குஷ்பு, வேறு எந்தத் தொகுதி பிரசாரத்திற்கும் போகவில்லை. காங்கிரஸ் அமைத்த தேர்தல் பிரசார பட்டியலில் குஷ்பு இருந்தாலும், தனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கடுப்பில் இருந்தார். ஆனாலும், அவரது குருநாதர் இளங்கோவன் தேனியில் இருப்பதால், அவர் வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் தேனியில் பிரசாரம் செய்தார்

குஷ்புவின் பிரசாரம் தேனி தொகுதியில் பெரிய அலையை உருவாக்கிவிட்டதே என்று அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
குஷ்பு முன்பு இளமையில் அழகாக இருந்தார், அப்போது அவர் சொன்னால் மக்கள் கேட்பார்கள். இபோது குஷ்பு கிழவியாகிவிட்டார், அவர் சொல்வதை இளங்கோவன் தவிர யாரும் கேட்க மாட்டார்கள்.

அவர் பிரசாரம் வேஸ்ட் என்று சொல்லிவிட, தேனி காங்கிரஸ் கொதித்துக் கிடக்கிறது. விஞ்ஞானி செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுக்க இளங்கோவன் தயாராக இருக்கிறாராம். விரைவில் ஆப்பு விழும் என்கிறார்கள்.