கடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..? மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..?

தமிழகத்தில் தாமரையை மலரவைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. பல்வேறு தப்புத்தப்பான மூவ் செய்துவருகிறது. சினிமா கலைஞர்களை பா.ஜ.க.வில் சேர்த்துவிட்டால், உடனே கட்சி வளர்ந்துவிடும் என்ற எண்ணம் இருக்கிறது.


ரஜினிகாந்தை பிடிக்க நினைத்தவர்களுக்கு கடைசியில் கிடைத்தது என்னவோ ராதாரவியும், நமீதாவும்தான். சமீபத்தில் வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியல்படி, காயத்ரி ரகுராமுக்கும், நமீதாவுக்கும் மட்டுமே பதவி கிடைத்தது. இதனால், கடுமையாக டென்ஷன் ஆனவர் ராதாரவி.

அதனால், மீண்டும் தி.மு.க.வுக்கே மாறிவிடலாமா என்று யோசித்துவருகிறார். கட்சி மாறுவதில் ராதாரவிக்கு எந்த கேவலமும், அசிங்கமும் கிடையாது என்பதால், எந்த நேரத்திலும் ஜம்ப் செய்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த நேரத்தில் யாராவது ஒருவரை உள்ளே இழுத்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.

குஷ்பு கடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறார் என்றாலும், அவரை எப்படியாவது இழுக்க பா.ஜ.க.முயற்சி செய்கிறதாம். அதனால், நேரடியாக அவர் பா.ஜ.க.வில் சேர்கிறார் என்று கல்யாணராமன் ட்வீட் போட்டுள்ளார் அதை குஷ்பு முதல் அத்தனை பேரும் கடித்துப் போடுகிறார்கள் என்றாலும், இதனால் காங்கிரசில் ஏதேனும் பிரச்னை வந்து குஷ்பு திசை மாற மாட்டாரா என்று யோசிக்கிறது பா.ஜ.க.

வட மாநிலத்தில் எப்படி இருக்கும் கட்சி, தமிழகத்தில் மட்டும் இப்படி சிந்திக்கிறதே.