ஹாஸ்பிடலில் குஷ்பு திடீர் அனுமதி! அவசர அறுவை சிகிச்சை! அதிர வைக்கும் காரணம்!

நடிகை குஷ்பு திடிரென ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த டிவி விவாதத்திலும் நடிகை குஷ்பு பங்கேற்கவில்லை. பொதுவாக காங்கிரஸ் பிரதிநிதியாக அவர் ஆங்கில ஊடகங்களில் கலந்து கொண்டு பேசுவதுண்டு. நேற்று ஆங்கில ஊடகங்கள் மட்டும் இல்லாமல் தமிழக ஊடகங்களிலும் குஷ்புவை காண முடியவில்லை.

இதற்கான காரணத்தை விசாரித்த போது அவர் அதற்கு முந்தைய நாளே அதாவது நேற்று முன் தினமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த குஷ்புக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு குஷ்புவை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று காலைகுஷ்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறிய அளவிலான அறுவை சிகிச்சை தான் என்றும் அவர் தற்போது குணமாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் திடீரென மருத்துவமனையில் அனுமதி, அவசர சிகிச்சை என குஷ்பு மருத்துவமனை விவகாரம் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.