அவனுங்க 4 பேரையும் சாகுற வரை ஜெயில்ல போடுங்க..! மாதவிடாய் என்று கெஞ்சியும் பெண்ணை கற்பழித்த 4 பேருக்கு தரமான முடிவு!

வங்கியில் பணிபுரிவதற்காக டெல்லியில் இருந்து தமிழகம் வந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வங்கிப் பணிக்கு தேர்வான டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 2018ம் ஆண்டு ரயிலில் வந்து கும்பகோணம் இறங்கினார். நள்ளிரவு நேரத்தில் ரயிலை விட்டு இறங்கிய அந்த பெண் ஒரு விடுதிக்கு செல்லுமாறு ஆட்டோவில் ஏறி உள்ளார். அப்போது அந்த ஆட்டோவை ஓட்டி வந்த குருமூர்த்தி அந்த பெண்ணை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்லாமல் ஊர் முழுவதும் சுற்றி உள்ளார்.

பின்னர் அந்தப் பெண் கோபமாக பேச அவரை வழியில் இறக்கிவிட்டார். பின்னர் அந்த பெண் 2 பேரிடம் முகவரி கேட்க குடிபோதையில் இருந்த அவர்கள் அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். பின்னர் 3வதாக வந்த அந்த கூட்டத்தில் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த பெண் பலத்த காயமும் அடைந்தார்.

பின்னர் பலாத்காரம் செய்துவிட்டு அவர்கள் தப்பிடவிட இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அந்த பெண். பிறகு குருமூர்த்தி, புருஷோத்தமன், அன்பரசன், தினேஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில், 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதாவது அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்லாமல் ஆட்டோவில் அலைக்கழித்த ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.