பெற்ற மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற வைத்த தந்தை..! டிஎன்ஏ சோதனையில் அம்பலமான பகீர் உண்மை! கும்பகோணம் அதிர்ச்சி!

தஞ்சை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக 28 வயது இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் உண்மையான குற்றவாளி சிறுமியின் தந்தை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு கர்ப்பமானார். இதற்குக் காரணம் 28 வயது இளைஞர் எனக்கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வயிற்றில் குழந்தை இறந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து உடனே அறுவை சிகிச்சை செய்து சிசுவின் சடலத்தை வெளியில் எடுத்தனர்.

பின்னர் சிசுவின் ரத்த மாதிரியும், இளைஞரின் ரத்த மாதிரியும் மரபணு சோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அந்த இளைஞர் காரணம் இல்லை என்பது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் மீண்டும் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து துருவி துருவி விசாரித்தனர். அப்போது கொத்தனாராக வேலை செய்யும் தந்தைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. தந்தை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமான நிலையில் அதை மறுத்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் பொய்யான புகாரை அளித்துள்ளனர்.

இதையடுத்து மகளை கர்ப்பமாக்கிவிட்டு நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கொத்தனாருக்கு 2 மகள்கள். மூத்த மகள் பாட்டி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.