நாங்குநேரி தொகுதிக்கு ஆசைப்படும் குமரி அனந்தன்! வம்புக்கு வரும் ராக்கெட் ராஜா! தி.மு.க. விட்டுக்கொடுக்குமா?

அடுத்த மாதத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. விக்கிரவாண்டியில் தி.மு.க. களம் இறங்குவது நிச்சயம்.


ஆனால், நாங்குநேரியில் ஏற்கெனவே வசந்தகுமார் நின்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சி தார்மீக உரிமை கோருகிறது. அதுவும் மூத்த தலைவரான குமரி அனந்தன் நாங்குநேரியில் நான் நிற்க விரும்புகிறேன் என்று வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.

வயதான காலத்தில் அவர் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்க ஆசைப்படுவதில் தவறு இல்லை, என்பதால் அவருக்கு சீட் கொடுப்பதற்கு காங்கிரஸ் தயார்.

ஆனால், ஏற்கெனவே நாங்குநேரி தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுத்தர வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்திருப்பதால், தி.மு.க. கேட்டுப்பெறும் முடிவில் இருக்கிறது. தி.மு.க ஒத்துழைப்பு இல்லாமல் இங்கு ஜெயிப்பது கடினம் என்பதால், ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு.

இந்த நிலையில் திடீரென நாடார் இயக்கத்தலைவர் ராக்கெட் ராஜா திடீரென அரசியல் ஆர்வத்தில் இருக்கிறார். அதனால், நாங்குநேரி தொகுதியில் ஹரிநாடார் போட்டியிடுவார் என்று இப்போதே அறிவிப்பு செய்திருக்கிறார். நாடார்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால், எளிதில் வெல்லலாம் என கணக்குப் போடுகிறாராம்.

என்னத்த சொல்றது?