மட்ட மல்லாக்காக கவிழ்ந்த பேருந்து! ஒரே நேரத்தில் 27 பேர் பலியான பரிதாபம்!

குலு மணாலியில் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 27 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


ஹிமாச்சல பிரதேச, குலு மணாலியில் பயணிகளுடன்  பேருந்து, பஞ்சார் பஸ் நிலையம் தாண்டி வந்துக் கொண்டிருந்த போது எதிர்ப்பாராத விதமாக நிலைத்தடுமாறிப்  பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளாகியது..

சம்பவம் குறித்து அறிந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு, பயணிகளை மீட்டதில்  படுகாயமடைந்த 35 பேரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்தில் இறந்தவர் குறித்த தகவலை விசாரித்து வருகின்றனர்.பேருந்து திடிரென பிரேக் பிடிக்கவில்லை என்றும் அது தான் விபத்திற்கு காரணம் என்றும் பேருந்து பழையது என்றும் கண்டிசனில் இல்லை என்றும் பயணிகள் கூறியுள்ளனர்.