திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்த கார்! இளம் மனைவி, மகளுடன் சடலமான அனிஷ்க்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்ததில் ஒரு குடும்பமே பலியாகியுள்ளது.


குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (30 வயது). மார்பிள் தொழில் செய்துவந்தார். இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், ஒன்றரை வயதில் அமர்நாத் என்ற மகனும் 

இருந்தனர். இந்நிலையில், இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக, தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார்,

சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில், அனிஷ், அவரின் மனைவி மற்றும் குழந்தை நீரில் மூழ்கி, மூச்சு முட்டி உயிரிழந்தனர். இதன்பேரில் குலசேகரம் போலீசார் அவர்களின்

சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, கார் மீட்கப்பட்டது. எதிர்பாரா விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.