மைதானத்தில் திடீரென கண் கலங்கி கதறிய குல்தீப்! நடந்தது இது தான்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோஹ்லி சதமடித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார்.


ஆனால் இந்த போட்டியில் குல்தீப் யாதவ் கண் கலங்கிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட் செய்த போது, குலதீப் யாதவ் வீசிய 16வது ஓவரை மொயீன் அலி எதிர்கொண்டார்.

மொயீன்  அலி குலதீப் யாதவ் வீசிய  ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி ஒரே ஓவரி 26 ரன்களை விளாசினார். அந்த ஓவர் முடிந்ததும் குல்தீப் யாதவ் விரக்தியில் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

இதை கண்ட சக அணி வீரர் நிதிஸ் ராணா அவரிடம் ஆறுதலாக பேசி அவரை தேற்றி பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார். இதனால் சில நிமிடம் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.