சரத்குமார் மகள் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் சீனியர் ஹீரோ!

தெலுங்கு திரை உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா, பிரபல திரைப்பட இயக்குனர் கே.ஸ் .ரவிகுமாருடன் புதிய படியில் கைகோர்க்கிறார்.


இந்த திரைப்படத்தின் பூஜை வரும் மே 17-ம் தேதி நடைபெற உள்ளது. படத்தை பற்றியும் அதன் உறுப்பினர் பற்றிய விவரமும் பூஜை அன்று தான் வெளியிடப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த படத்தில் மேலும் ஒருவர் தமிழ் திரை உலகிலிருந்து இணையவுள்ளார்.  அது வேற யாரும் இல்லை தமிழ் திரைப்படங்களில் மிகவும் அழுத்தமான காதாபாத்திரங்களையும் மிக எளிதாக நடிக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

இந்த திரைப்படத்தின் பெயர் "ரவுடி போலீஸ்" ஆகும்.  இந்த படத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்க வேண்டும் என்பதில் இயக்குனர் கே.ஸ். ரவிக்குமார் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் பாலகிருஷ்னாவும் வரலட்சுமி தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்!

இன்னும் இதற்கான ஒப்புதல் வரலக்ஷ்மியிடம் இருந்து வரவில்லை.  ஒருவேளை இவர் கிறீன் சிக்னல் காட்டிவிட்டால் பாலகிரிஷ்ணாவிற்கு எதிராக மிகவும் அழுத்தமான காதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி இருக்கும். இவர், இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் ஏற்புடையவர் என்று இந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்.

ஏற்கனவே வரலக்ஷ்மி "சேசிங்", "கன்னித்தீவு", "மத கஜ ராஜா" மற்றும் ""அண்மை போன்ற  பல திரைப்படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது 

இந்த திரைப்படத்தை சி.கல்யாண் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு பொங்கல் விழாவின் போது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.