எனக்கே எங்க அப்பாவைப் பற்றி தெரியாது..! பகீர் கிளப்பும் கே.எஸ்.அழகிரி

தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் 31 தகவல்கள் கேட்கப்படுகிறது. இது படிக்காத கிராமத்து மக்களை குழப்பிவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.


இந்த சட்டம் குறித்து அவர் இன்று பேசும்போது, ‘‘ஒவ்வொருவரும் தன்னுடைய தந்தை, தாய் பிறந்த ஊர், பிறந்த தேதி சொல்ல வேண்டும். எனக்கே என்னுடைய தந்தையின் பிறந்த தேதி தெரியாது. அப்படியானால், என்னை சந்தேகத்தில் வைப்பார்கள். இவை நடைமுறை சாத்தியமா? அந்த காலத்தில் துக்ளக் செய்ததை இவர்கள் செய்கிறார்கள். அரசாங்கம் கேட்கும் ஆவணங்களை கொடுக்க முடியாத கிராம மக்கள் எப்படி 31 ஆவணங்களை கொடுப்பார்கள். இதெல்லாம் பலன் தராது. 

 நாணயத்தை மாற்றினார்கள், அதனால் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் என்ன லாபம் இதனால் எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அதே போல் தான் இந்த சட்டமும். 

பெரிய சிலை தாக்கப்பட்டதென்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. பெரியார் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர். இன்று சமூகத்தின் அடித்தட்டு உயர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு பெரியார் முக்கிய காரணம். அவருடைய சிலை தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது’’ என்று கூறியிருக்கிறார்.