தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத நிகழ்வாகத்தான் அது கருதப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கிருஷ்ணசாமி அவுட்! காரணம் ஜான் பாண்டியனாம்!
அதாவது ஜான்பாண்டியனை தமிழக அமைச்சர்கள் தேடிப்போய் ஆதரவு கேட்டார்கள். ஆனால், அவரோ அத்தனை பேரையும் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வினர் அத்தனை பேருக்கும் வருத்தம் என்றாலும், ஏகமாய் கோபித்துக்கொண்டவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
அதிகாரபூர்வமாக கூட்டணியில் தான் இருக்கும்போது, தன்னை கலந்து ஆலோசிக்காமல் அமைச்சர்கள் ஜான் பாண்டியனை சந்தித்ததில் செம வருத்தமாம்.
அதனால், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால், நாங்குநேரியில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக மக்கள் யாரும் இல்லை என்பதை அறிந்துதான் ஜான் பாண்டியனை சென்று பார்த்தார்களாம்.
எப்படியோ, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார் கிருஷ்ணசாமி. அது மட்டுமின்றி, இன்று பாரதப்பிரதமர் தமிழகம் வந்தபோது கிருஷ்ணசாமி பிரதமரை வரவேற்க வந்து நின்றார்.
ஏற்கெனவே பா.ஜ.க. ஆதரவினால்தான் அ.தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்தார் கிருஷ்ணசாமி. இப்போதைய திடீர் வெளியேற்றத்துக்கும் பின்னே பா.ஜ.க. இருக்கும் என்றுதான் கூறப்படுகிறது. தனக்கு கூட்டணி சேர்க்கும் பா.ஜ.க.விற்காகத்தான் அ.தி.மு.க.வை கை கழுவியிருக்கிறாராம்.
மோடியும் தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை குறித்து எந்த உத்தரவாதமும் இதுவரை தரவில்லை என்பதுதான் ட்விஸ்ட்.