3 முறை கர்ப்பம்! 3 முறையும் கருக்கலைப்பு! விஷம் குடித்த மறுநாள் காதலியை மனைவியாக்கிய காதலன்! ஆனால்..?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து ஏமாற்றி பின் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் காவல்துறை இளைஞர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவர் காவல்துறை மோப்பநாய் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த  கண்ணனின் உறவினருமான நதியா என்ற பெண்ணும் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

காதலிக்கும் போதே கண்ணனால் நதியா 3 முறை கர்ப்பமானதாகவும், கருவை 3 முறையும் கலைத்ததாகவும் கூறுகிறார்கள். பின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சிறு விரிசல் தொடர்ந்து நதியாவை சமீபகாலமாக கண்ணன் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த நதியா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த பின் வீட்டிற்கு திரும்பினார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்படாமல் டிஎஸ்பி அவர்களின் சங்கீதா அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கண்ணனை கூப்பிட்டு விசாரித்த பின் அவர் தான் நதியாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் தலைமையில் அவர்கள் இருவருக்கும் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்தது.

ஆனால் திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் வேண்டா வெறுப்பாக இருந்தனர். மாலை மாற்றும் போது காதலி முகத்தை கூட காதலன் பார்க்கவில்லை. இருவரும் சற்று இடைவெளி விட்டே அமர்ந்திருந்தனர்.