ஆண்களே செய்யத் தயங்கும் வேலை..! விறுவிறுவென ஏறி மின்னல் வேகத்தில் முடித்து இறங்கும் இளம் பெண்! யார், என்ன தெரியுமா?

ஆண்கள் மட்டும் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து வந்த பணியை இனி பெண் ஒருவரும் செய்து சாதனை படைக்கப் போகிறார்.


அரங்கத்தில் ஒரு பெண் நடனம் ஆட அவர் ஆடி முடித்ததும் ஒரு குழந்தை ஒடிவந்து மம்மி என்று கட்டிப்பிடிக்கும். உடனே அரங்கத்தில் இருப்பவர்கள் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சி அடைவர்கள். அந்த சோப்பை போட்டுக் குளித்தால் சருமம் திருமணம் ஆனது போலவே தெரியாது என்பதுதான் அது. பொதுவாக பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் கடினமான வேலை செய்ய முடியாது என்பது கருத்து. அதனால்தான் திருமணம் செய்த பெண்கள் ஒரு கடினமான வேலை செய்தால் எல்லோருமே ஆச்சரியப்படுகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புஷ்பராஜ் என்பவரின் மனைவி ஜோதி ஐடிஐ தொழிற்கல்வி படித்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஜோதி மின்கம்பம் ஏறுதல் பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான இதற்கான உடற்தகுதித் தேர்வில் ஜோதி கலந்து கொண்டார். ஜோதி கடகடவென அசால்ட்டாக அந்த மின்கம்பத்தில் ஏறி, சீரமைப்பு பணியினை சிறப்பாக செய்து காட்டியதுடன் அதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.

உடல் தகுதித் தேர்வில் 1,170 பேர் பங்கேற் நிலையில் 337 பேர் தேர்வாகினர். இதில் 61 பேர் பெண்கள், அவர்களில் ஜோதி மட்டுமே இந்த தேர்வில் தகுதி பெற்றுள்ளார். இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதிப்பதற்கு உடல் வலிமையை விட மனவலிமையே அதிகம் தேவை என்பதை உணர்த்துகிறது.