கோயிலை மட்டும் ஏன் உசரமா கட்டுறாங்கன்னு தெரியுமா?

கோவில் கோபுரங்களின் உயரங்களுக்கும் கோபுரக்கலசங்களின் தேவைகளுக்கும் இன்றைய ஆராச்சியாளர்கள் குடுக்கும் பதில்கள் வியப்பூட்டுகின்றன. நம் முன்னோர்கள் கோவில்களின் அளவையும் அமைப்பையும் பற்பல அனுபவங்களுக்கு பின்னரே இத்தனை ஆக்கபூர்வமாக அமைத்திருபார்கள் என்பது தெளிவாகிறது.


அனைத்து ஊர்களிலும் உயரமான கோயில்களையும் கோபுரங்களையும் பார்த்திருப்பீர்கள். ஏன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஏன் உயரம் உயரமாக் கோயில் கட்டினார்கள் தெரியுமா?

மனிதனின் நலனை முன்னிட்டுத்தான் கோயில் உயரமாக கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு() ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது என்ற அறிவியல் காரணம் இருக்கிறது.

எதற்காக இத்தனை தானியங்களை உள்ளே வைக்கிறார்கள் தெரியுமா? முன்பு பெருமழை பெய்யும்போது தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போக வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாம் என்ற சிந்தனைதான். 

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகளாக பயன்படுகின்றன. அதனால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.