கோவை துடியலூர் அருகே மர்மமான முறையில் இறந்துகிடந்த 6 வயது சிறுமி. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் கதறியபடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் பயங்கரம்! 6 வயது சிறுமி 5 பேரால் பலாத்காரம் செய்து கொலை! தடுக் தகவல்!
கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஆறு வயது பெண் குழந்தை திப்பனூர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை பள்ளி சென்று திரும்பிய சிறுமியை அவரது தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பியுள்ளார். கடைக்குப் போன சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பிவராததை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டின் அருகே முட்டுச்சந்தில் முகத்தில் துணி சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் அந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டாள்.
தனது மகளை மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என பெற்றோர் காவல்துறையினரிடம் கதறியபடி கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசாரும் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை. வசந்த், விஜயகுமார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் 3 பேரை கோவை போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வருகிறது.