செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கிய இளம் பெண்! பிறகு நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ!

சென்னை கோட்டூர் புரத்தில் பட்ட பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோட்டூர் புரத்தை சேர்ந்தவர் செல்வி, இன்று காலை 8 மணியளவில் ஏரிக்கரை சாலை அருகில் திருமணத்திற்கு சென்று விட்டு வீடுத் திரும்பி வந்த பெண்ணை  வழி மறைத்து தாக்கியதுடன் கழுத்தில் இருந்த  செயினை பறிக்க மர்ம நபர்கள்  முயற்சி செய்துள்ளனர்.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அப்பெண் செயினை கெட்டியாக பிடித்துள்ளார் .மேலும் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் செல்வியை ஆக்ரோசமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

தாக்கியதில் கழுத்தில் பலமான சிராய்ப்புகள் இருந்ததால், இதனை அடுத்து கோட்டூர் புரம் ஜெ-4 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.