கொங்கு ஈஸ்வரன் எடப்பாடியாருக்கு வாழ்த்து.! கூட்டணி மாறுவாரா..?

எடப்பாடி பழனிசாமி அடுத்த தமிழக முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில் கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த கொங்கு ஈஸ்வரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், "2021 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொமதேக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இப்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கொங்கு ஈஸ்வரன் இப்படியொரு செய்தி அனுப்பியதில் இருந்து கூட்டணி மாறுவதற்கு தயராக இருப்பதாக அரசியல் புள்ளிகள் கருதுகிறார்கள். அள்ளிக்கொள்ளுமா அ.தி.மு.க. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.