கடைக்குள் புகுந்த திருடன்! கல்லாவில் இருந்த பணத்தை விடுத்து அவன் எடுத்துச் சென்ற பொருள்! அதிர்ச்சி சம்பவம்!

திருடும் இடத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்தும் வெங்காயத்தை மட்டும் குடும்பஸ்தர்கள் திருடிய சம்பவம் கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது.


நாடு முழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா அதிக மழைபொழிவால் வெங்காய விளைச்சலும், அதனைத் தொடர்ந்து விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே வெங்காய விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மற்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளது 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காய்கறி கடையின் பூட்டை உடைத்த திருடர்கள் அங்கே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டைகளை மட்டும் அள்ளிச் சென்றனர். மேலும் இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்டவற்றையும் அவர்கள் திருடியுள்ளனர். அங்கிருந்த கல்லாப் பெட்டி திறந்திருந்தது. அதில் கட்டுக் கட்டாக பணமும் இருந்துள்ளது. ஆனால் மிகவும் நேர்மையான திருடர்கள் எதற்காக வந்தோமோ அதுவே இலக்கு என கருதி ஒரு ரூபாய் கூட எடுத்து செல்லவில்லை. இதையடுத்து வெங்காயம் இல்லாமேலேயே கண்களில் கண்ணீரோடு அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்களை போலீசார் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர். 

வெங்காயத்தை திருடியவர்கள் கண்டிப்பாக வழக்கமான கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்த போலீசார், வெங்காயம் இல்லாமல் வீட்டிற்கு வரக்கூடாது என மனைவிமார்கள் உத்தரவுப் போட்டதால் வேறு வழியின்றி அந்த குடும்பஸ்தர்கள் குடும்பத்துக்காக வெங்காயம் திருடி இருக்கலாம் என தெரிவித்தனர்.