மனைவிக்கு பாலியல் தொந்தரவு! பிரபல கிரிக்கெட் வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வேக பந்து வீச்சாளர் மீது கொல்கத்தா போலீஸ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வரதட்சனை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.கொல்கத்தா போலீஸ் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமியின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் வரதட்சனை கொடுமை ஆகிய.  குற்றங்களுக்காக ஜாமினில் வெளிவரமுடியாத  பிரிவு 498 ஏ (வரதட்சணை தொல்லை) மற்றும் 354A (பாலியல் துன்புறுத்தல்) பிரிவுகளில் அலிப்பூர் போலீஸ் நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் 7, 2018 - ல் ஷமியின் மனைவி ஜஹான் அவரின் மீது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக BCCI-யிடம் புகார் அளித்தியிருந்தார் இதனை விசாரித்த BCCI அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று விசாரணைக்கு பின் அறிவித்தது.

இந்நிலையில் அவரது மனைவி கொடுத்த புகாரின் பெயரில், கொல்கத்தா போலீஸ் ஷமியின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் வரதட்சனை கொடுமை  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள ஐபில் போட்டி மற்றும் மே மாதம் தொடங்கவுள்ள  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக திகழும்  ஷமி விளையாடுவரா என்ற சந்தேகத்தை எழிப்பியுள்ளது.