கை கால்களை கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்த மேஜிக் மேன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கொல்கத்தாவில் தனது கைகளையும் கால்களையும் சங்கிலிகளாலும், கயிறுகளாலும் பிணைத்துக் கொண்டு கங்கையாற்றுக்குள் இறக்கப்பட்ட மாஜிக் நிபுணர் நீருக்குள் காணாமல் போன நிலையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சஞ்சால் லாகிரி. மேஜிக் நிபுணரான இவர் தனது கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு ஹவுரா பாலத்தில் மீதிருந்து தன்னை  ஆற்றில் இறக்கச் செய்து தானே மீண்டு வரும் சாகசத்தை செய்யப்போவத அறிவித்தார். 

அதனைக் காண ஹவுரா பாலத்தின் மீது ஏராளாமானோர் குவிந்தனர். சொன்னபடி கைகளும் கால்களும் சங்கிலிகளாலும், கயிறுகளாலும் பிணைக்கப்பட்ட நிலையில் பாலத்தின் மீதிருந்து கிரேன் மூலம் சஞ்சல் லாகிரி ஆற்றில் இறக்கப்பட்டார். கூறியபடி அவர் வெளியில் வருவதை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். 

ஆனால் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் மேலே வராததையடுத்து பார்வையாளர்கள் கலவரம் அடைந்தனர். அவர்களில் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பேரிடர் மீட்புப் படையினருடன் போலீசார் அங்கு வந்தனர். திறன்மிக்க நீச்சல் வீரர்கள் வெகு ஆழம் வரை சென்று தேடியும் லாகிரியைக் காணவில்லை 

இந்த சாகசத்தைச் செய்ய லாகிரி போலீசாரிடமும் கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்திடமும் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் ஆனால் இது ஒரு கப்பல் அல்லது படகுக்குள் நடைபெறும் என்றும் தண்ணீருக்கும் சாகசத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்து லாகிரி அனுமதி பெற்றதாக போலீசார் தெரிவித்துள்லனர்.