நடு ரோட்டில் செக்ஸ் சீண்டல் செய்தவனின் பைக்கில் ஏறி அமர்ந்த இளம் பெண்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

ஓடும் பைக்கில் சில்மிஷம் செய்த நபரை, துரத்திச் சென்று, பின்னால் பாய்ந்து ஏறியபடி, அடித்து உதைத்த இளம்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சர்வே பார்க் அருகே காலேஜ் படிக்கும் மாணவி ஒருவர், டியூசன் சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது, இரவு 10.45 மணி ஆகும். அப்போது, பைக்கில் வந்த மர்ம ஆசாமி, அந்த மாணவியை சுற்றி வந்து மிரட்டியதோடு, அவரது உடல் பாகங்களை தொட்டு, சில்மிஷம் செய்துள்ளார். 

திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த மாணவி, பைக்கில் வந்த நபரின் பின்னால் ஏறிக் கொண்டார். பின், அந்த நபரின் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அடி வெளுத்துள்ளார். இதில், அதிர்ச்சியடைந்த, மர்ம ஆசாமி பைக்கை வேறு வழியின்றி, நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவி இறங்கிச் சென்று, போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

அந்த நபரை தற்போது கைது செய்துள்ளனர் போலீசார். தன்னிடம் சில்மிசம் செய்தவனை சிறிதும் தாமதிக்காமல் அவனது பைக்கிலேயே ஏறி வெளுத்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.