கையில் மதுக்கோப்பை! நீச்சல் உடை! பெண் எம்பியின் வைரல் புகைப்படம்!

கொல்கத்தா: கணவருடன் தேனிலவு சென்றுள்ள நடிகையும், எம்பியுமான நுஸ்ரத் ஜஹானை பலரும் சமூக ஊடகங்களில் கலாய்த்து வருகின்றனர்.


பெங்காலி நடிகையான நுஸ்ரத் ஜஹான் சமீபத்தில் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதே நேரத்தில் அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பியாகவும்  தேர்வாகியுள்ளார். இந்நிலையில், நுஸ்ரத் தனது கணவர் நிகிலுடன் தற்போது மொரீசியஸ் நாட்டிற்கு தேனிலவு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே தனது தேனிலவு பயணம் பற்றிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், திருமண புகைப்படங்கள் சிலவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார். 

ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த புகைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆம். அழகான நடிகை, இளம் எம்பி என்றும் பாராமல் அவர் அணிந்துள்ள உடைகள், அவற்றின் நிறம், புகைப்படம் எடுக்கப்பட்ட லொக்கேஷன் உள்ளிட்டவற்றை வைத்து, ரசனை கெட்ட நபர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

ஆனால், கலாய்ப்பது ஒன்றும் தனக்குப் புதியதல்ல என, நுஸ்ரத் ஜஹான் குறிப்பிட்டுள்ளார். ''ஏற்கனவே, எம்பியாக பதவியேற்ற போது நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பலரும் என்னை கேலி, கிண்டல் செய்தனர். அதன்போதே, விமர்சனங்களை ஏற்க பழகிவிட்டேன். தற்போது தேனிலவு புகைப்படங்களை வைத்து விமர்சிப்பவர்களை நான் எதுவும் சொல்வதற்கில்லை, '' என்றும் நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.