கொலைகாரன் விமர்சனம்! எப்படி இருக்கு விஜய் ஆண்டனி படம்?

மிகப்பெரிய பில்டப்பு களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள கொலைகாரன் திரைப்படம் ரசிகர்களை கவர உள்ளதா என்பதுதான் தற்போதைய கேள்வி.


இசை அமைப்பாளராக இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி நடிப்பில் புதிதாக வெளியாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நான் என முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அதே கேரக்டரில் தான் தற்போதும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் மட்டுமல்ல இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்துள்ள அனைத்து படங்களிலும் அவருக்கு இதே போன்ற கதாபாத்திரங்கள் தான்.

கொலைகாரன் திரைப்படத்தின் ஒன்லைன் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. ஒரு கொலை கதாநாயகனான விஜய் ஆண்டனி செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. மற்றொரு கொலை கதாநாயகி மற்றும் அவரது தாயார் இணைந்து செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதில் ஒரு கொலையை தான் தான் செய்தேன் என்று கூறி விஜய் ஆண்டனி போலீசாரிடம் சரண் அடைகிறார். பிறகு கொலைக்கான காரணத்தை அவர் தெரிவிக்கிறார். ஆனால் கதாநாயகியும் அவரது தாயாரும் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலையை உண்மையில் யார் செய்தது என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இதைப்போல் விஜய் ஆண்டனி கொலை செய்ததாக ஒப்புக் கொள் வதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து உள்ளனர்.

உண்மையில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். ஆனால் தெளிவில்லாத மற்றும் சுவாரஸ்யம் குறைவான திரைக்கதையால் படம் ஆங்காங்கே தடுமாறுகிறது.

காவல்துறை அதிகாரி கார்த்திகேயன் ஆக அர்ஜுன் வழக்கம்போல் மிரட்டுகிறார். ஆனால் அவரது கேரக்டருக்கு எதிர்பார்த்த வெய்ட் இல்லாததால் படம் பார்த்த பிறகு ஒரு ஏமாற்றம் தெரிகிறது.

இதே போல் கதாநாயகி கதாநாயகியின் தாயாக வரும் சீதா என அனைவருமே பெரிய அளவில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்த வில்லை. கதாநாயகன் விஜய் ஆண்டனி கொடுத்த வேலையை மட்டும் செய்துள்ளார். இயக்குனர் இன்னும் சிறிது மெனக்கெட்டிருந்தால் இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்திருக்கும்.