7வதாக களம் இறக்கப்பட்ட தோனி! இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோக கோலி – சாஸ்திரி காரணமா?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனபவ வீரர் தோனியை முன்கூட்டியே களம் இறக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.


240 ரன்கள் என்கிற எளிய இலக்கை இந்திய அணி 30 ஓவர்களில் கடந்துவிடும் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்த பிறகு அதில் சிறு பின்னடைவு ஏற்பட்டது. அதே சமயம் கோலி ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணியின் நம்பிக்கையே தூள் தூளாகிவிட்டது.

 கோலி ஆட்டம் இழந்த பிறகு அனைவரும் எதிர்பார்த்தது தோனி களம் இறங்குவார் என்று தான். ஆனால் கோரி வரவில்லை. மாறாக ரிஷப் பந்த் களம் இறக்கப்பட்டார். இக்கட்டான சூழலில் அனுபவம் இல்லாத ரிஷப் பந்த் களம் இறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் பந்த் இங்கிலாந்து வீரர்களை எதிர்கொண்டது ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது. அதே சமயம் அவர் அவசரப்பட்டு ஆடி ஆட்டம் இழந்தது அவரது அனுபவம் இன்மையை காட்டியது. இதன் பிறகாவது கோலி இறங்குவார் என்று பார்த்தால் இல்லை. ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு தான் தோனி களம் கண்டார்.

அப்போதே இந்தியா பாதி தோல்விஅடைந்திருந்தது. மேலும் மனதளவிலும் இந்திய வீரர்கள் தோல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தோனி பொறுப்புடன் ஆடினார். அவரது அனுபவம் போட்டியில் எதிரொலித்தது. தோனி மட்டும் கோலிக்கு பிறகு இறங்கியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட் விழுவதை தடுத்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

விக்கெட் விழாமல் இருந்திருந்தாலெ இந்திய அணி எளிதாக இலக்கை எட்டியிருக்கும். அந்த வகையில் தோனியை சரியான இடத்தில் இறக்காமல் கோலி – சாஸ்திரி செய்த தவறே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.