அசுரவேகத்தில் ஆம்னி பேருந்து! திடீரென கண் அயர்ந்த டிரைவர்! தூக்கி வெளியே வீசப்பட்ட இளம் பெண்! அதிர வைக்கும் கோர விபத்து!

கொச்சினில் இருந்து புறப்பட்ட சொகுசு பேருந்து இன்று அதிகாலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் திண்டுக்கல் நோக்கி வந்த போது, எதிர்ப்பாராத விதமாக அங்கிருந்த டிஜிட்டல் பேனர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் , தூங்கிக் கொண்டுருந்த பெண் விபத்தின் போது வெளியே தூக்கி வீசிப்பட்டது தான் இந்த விபத்தின் கோரமான சம்பவம்.

தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் பேருந்து பேனர் மீது மோதி மொத்தமாக உருக்குலைந்த சம்பவம் கேட்போரை உறையச் செய்வதாக உள்ளது.