காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கத்திக்குத்து! கைது செய்யப்பட்ட கைவினைக் கலைஞர்!

கர்நாடகாவின் மைசூரு நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் சென்றுள்ளார்.


கர்நாடகாவின் மைசூரு நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் சென்றுள்ளார். அவர் அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென சைத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.இதன்பின் அங்கிருந்து தப்பி செல்ல அந்த நபர் முயன்றுள்ளார்.

அவரை சுற்றியிருந்தவர்கள் உடனடியாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதன்பின்பு சைத் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் சீரான நிலைக்கு திரும்பியுள்ளார் என கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் திருமண நிகழ்ச்சியை படம் பிடிக்க வந்த புகைப்படக்காரர்களால் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.அந்நபர் மைசூரு நகரை சேர்ந்த பர்ஹான் பாஷா (வயது 24) என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைவினை கலைஞரான அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக பதவி வகித்தவர் சைத் ஆவார்.