விஜயை படு கேவலமாக திட்டிய அஜித் ரசிகர்! பதிலுக்கு தளபதி ரசிகன் செய்த பயங்கர சம்பவம்! அதிர்ச்சியில் சென்னை!

சென்னையில் கடந்த திங்கட்கிழமை இரவு அன்று அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஜித் ரசிகர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.


இந்நிலையில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பொதுவாகவே தமிழகத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் சண்டையிடுவது வழக்கமான ஒன்றாகும். நடிகர் விஜய் திரைப்படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்கள் அதற்கு கமெண்டுகள் அடிப்பதும், நடிகர் அஜித் நடித்த திரைப்படம் வெளிவந்தால் விஜய் ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் சமூக வலைதளங்களில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் சென்னையில் திங்கட்கிழமை இரவு அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர்கள் பலர் இரவு நேரம் என்பதால் ரோட்டில் அமர்ந்து பேசி உள்ளனர்.இதையடுத்து அஜீத் ரசிகர் ஒருவர் விஜய் பற்றி அவதூறாக பேசியுள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர் அவர் வைத்திருந்த கத்தியால் அஜித் ரசிகரை தாக்கி உள்ளார் இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்நிலையில் காயம் பட்டவர் உமாசங்கர் எனவும் அவரை தாக்கியவர் ரோஷன் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது உமா சங்கர் பேசிக்கொண்டிருக்கும்போது விஜயை பற்றி அவதூறாக பேசியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ரோஷன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ரோஷன் திடீரென தனது வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து உமாசங்கரை வயிறு மற்றும் தோள் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரை உடனே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்படி சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோஷன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.