8 ரன்களுக்கு 7 விக்கெட் பறிகொடுத்த டெல்லி: ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து கலக்கிய சாம் குரான்.

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசி சீரான இடைவெளியில் விக்கெட்களை கைப்பற்றினர். இதனால் எந்த ஒரு வீரரும் அரை சதம் கூட அடிக்கவில்லை. அந்த அணியின் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்தார் .அவருக்கு அடுத்தபடியாக சர்ப்ராஸ் கான் 39 ரன்களை சேர்த்தார். விக்கெட்கள் ஒரு பக்கம் போனாலும் மந்தீப் சிங் மட்டும் ஒரு முனையில் பொறுப்பாக விளையாடி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். இவர் அவுட் ஆகாமல் 29 ரன்களை சேர்த்தார்.இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர்  களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்கவீரர் ப்ரித்வி ஷா டக் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானுடன் இனைந்து ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.ஷிகார் தவான் 30 ரங்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கும் அவுட் ஆகினர். பின்னர் ரிஷாப் பாண்ட் மற்றும் இங்கிராம் ஜோடி சிறப்பாக அடி ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்திருந்தது.

டெல்லி சறுக்கல்:

17வது ஓவரின் ஷமி வீசிய 4வது பந்தில் ரிஷாப் பாண்ட் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிஸ் ரன் அவுட் ஆனார்.பின்பு களமிறங்கிய அணைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.சாம் குரான் சிறப்பாக பந்து வீசி ஹட் ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார். இவர் 4 விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினார். டெல்லி அணி கடைசி 8 ரன்களை சேர்பதற்குள் 7 விக்கெட்களை பறிகொடுத்து ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தில் தோல்வி கண்டது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.