ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமி! 55 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி! உயிரோடு புதைக்க அனுமதித்த பரிதாபம்!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்ட எட்டு வயது சிறுமியை மீட்கும் முயற்சி மூன்று நாட்களாக நீடித்த நிலையில் அந்த முயற்சியைக் கைவிடும் கடினமான முடிவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்ட எட்டு வயது சிறுமியை மீட்கும் முயற்சி மூன்று நாட்களாக நீடித்த நிலையில் அந்த முயற்சியைக் கைவிடும் கடினமான முடிவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சீமா என்ற எட்டு வயது சிறுமி ஒருத்தி மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டாள், குழந்தையை மீட்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மண் இளகிய சேறாகிக் கிடந்ததால் பின்னடைவு ஏற்பட்டது ,

பள்ளம் தோண்ட தோண்ட அக்கம் பக்கம் இருந்த வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மீட்புக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் புதை சேற்றில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடினர்.பெரும் முயற்சிக்குப் பிறகு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீட்பு முயற்சியை நடத்த முடியாது என்று மீட்புக் குழுவினர் கைவிட்ட நிலையில் பெற்றோரின் ஒப்புதலுடன் நீதிமன்ற ஒப்புதலும் பெறப்பட்டு நேற்று அதிகாலையில் 55 மணி நேரமாக நீடித்த மீட்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த சிறுமி பரிதாபகரமாக உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டாள்