பிறந்து 31வது நாள்! பச்சிளம் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! வீட்டிலேயே சமாதி! கருத்தம்மாவை மிஞ்சிய அதிர்ச்சி!

எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது இவர்களை! பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற பெற்றோர்! மதுரையில் நடந்த அவலநிலை!


மதுரையில் பிறந்த 31 நாட்கள் ஆனா நிலையில் பெற்றோர்கள் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து வீட்டில் கொன்று புதைத்துள்ளார்கள். இந்த செய்தி அப்பகுதி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகவல் அறிந்த காவல் துறையினர் பெற்றோரை கைது செய்தனர்.

தமிழகத்தில் மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் முன்பு இருந்தது. பின்னர், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக அரசு சார்ப்பில் தொட்டில் குழந்தை திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தது. மேலும், கருத்தம்மா போன்ற திரைப்பட துறையிலும் பல பெண் சிசு கொலைகள் சம்பதமான விழிப்புணர்வு படங்களும் வெளிவந்தன.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் மறைந்து போனது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மீண்டும் அந்த பழக்கம் நடைமுறைக்கு வந்து இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் செக்கானூரணியை அடுத்த புல்லநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுருகன். இவரது மனைவின் பெயர் சவுமியா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், சவுமியா மீண்டும் கர்ப்பமானார்.

அடுத்த குழந்தை ஆண் பிள்ளை என்று மிகவும் எதிர்பார்த்து கொண்ட இருவரும் பிரசவதிற்காக உறவினர்கள் உள்ள செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஜனவரி மாதம் 31-ந் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த இருவருக்கும் இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிறந்து 31 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் சமத்தத்துடன் பெண் சிசுவிற்கு இரவோடு இரவாக கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்து விட்டனர் . பின்னர் இந்த தகவல் கசிந்து யாரோ முகம் தெரியாத நபர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவலயும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர்

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். ஆனால் அங்கு வைரமுருகன் குடும்பத்தினர் எவரும் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், வெளியூரில் பதுங்கி இருந்த வைரமுருகன், சவுமியா மற்றும் வைர முருகனின் தந்தை சிங்கத்தேவன் ஆகிய 3 பேரும் காவல் பிடியில் பிடிபட்டனர். மேலும் அவர்களை கைதுயும் செய்தனர். கைது செய்து பின்னர் அவர்களிடம் செக்கானூரணி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது வைரமுருகன் ‘எனக்கு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை என்றும் அதனை கொல்வது என்று நானும், எனது தந்தையும் முடிவு செய்தோம். என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக 31 நாளே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்துள்ளார்கள். மேலும், குழந்தையின் உடலை வீட்டு முன்பு புதைத்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

பின்னர் தாசில்தார் செந்தாமரை முன்னிலையில் சிசுவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் பிறகு உசிலம்பட்டி மருத்துவர்களை வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனையும் செய்தனர். தமிழகத்தை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்ற காமெடி வசனம் தற்போது இந்த நிகழ்விற்கு மிகுந்த பொருத்துடன் அமைகிறது.