நாடு முழுவதும் கடத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகள் விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலங்களில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2016-ல் 4980 பேர் விபச்சாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து கடத்தப்படும் சிறுமிகள்! விபச்சார அழகிகளாக மாற்றப்பட்டும் அவலம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

மேலும் சில பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி வந்து கொத்தடிமைகளாகவும், விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. பெங்களூரு இந்தியாவின் தென்மேற்கு மாநிலங்களுக்கான முக்கிய நுழை வாயிலாக செயல்படுவதால் சிறுவர் கடத்தலுக்கான மையமாகத் திகழ்வதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் தேபாஷ்மிதா சட்டோபாத்யாய் பானர்ஜி தெரிவிக்கிறார்.
பெரும்பாலான குழந்தைகள் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள். இந்த மாநிலங்களில் இருந்து சிறுமிகள் அழைத்து வரப்பட்டு குழந்தைத் தொழிலாளர்களாகவும் விபச்சாரத்திற்காகவும் விற்பனை செய்யப்படுகிறார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ரயில் மூலமாக சிறுமிகள் கடத்தி வரப்படுவதை கண்டறிய இந்திய ரயில்வே ஆபரேஷன் நன்ஹே ஃபரிஷ்டே' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு முகம் அடையாளம் காணும் முறைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
2016- ஆம் ஆண்டில் மனித கடத்தலில் கர்நாடகா 5வது இடத்தில் இருந்தது. மாநிலங்களின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுகளால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, தென்னிந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது கர்நாடகா. பாதிக்கப்பட்டவர்களில் 57.65% பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள், 8.2% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சர்வதேச நீதி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.
பணத்தால் கவர்ந்திழுக்கும் முகவர்களுக்கு ஏழைக் குடும்பங்கள் பலியாகிறது. பின்னர் வேலைக்கு சென்ற இடத்தில் கொத்தடிமைகள் போல் அடிமாட்டு சம்பளத்தில் செங்கல் சூளைகள், கோழிப் பண்ணைகளில் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சர்வதேச நீதி மிஷனின் பகுப்பாய்வின்படி, 2013 மற்றும் 2019 க்கு இடையில் கர்நாடகாவில் மீட்கப்பட்ட 1580 பிணைக்கப்பட்ட தொழிலாளர்களில் 1091 பேர் ஆள் கடத்தலுக்கு பலியாகியுள்ளனர். குற்றவாளிகள் மக்களை இலாபத்திற்காக இரக்கமின்றி சுரண்டுவதைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டி எழுப்ப உதவுவதற்கும் நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என மனித கடத்தல் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.