வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன் விபச்சாரம்! வேலூரை கலக்கும் கேரள பெண்கள்!

மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி பாலியல் தொழில் செய்துவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


வேலூர் கொசப்பேட்டை நல்லான்பட்டறைத் தெருவில் இளைஞர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். இங்கு, அடிக்கடி இளம்பெண்கள் வந்து செல்வதாக, வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையில், போலீசார் நேரில் சென்று, விசாரணை நடத்தினர்.

அங்கு 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்தபோது, கேரள மாநிலம், மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த ஷபீக் (28 வயது) என்பவர், அந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீசார், உடனடியாக இளம்பெண்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதன்பேரில், வேலூர் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மசாஜ் சென்டர் நடத்துகிறோம் என்ற பெயரில் யாரேனும் வாடகைக்கு வீடு கேட்டால், உரிய ஆவணங்களை பெற்று, உறுதி செய்துகொண்டபின், வாடகைக்கு வீடு விட வேண்டும். தவறினால், பாலியல் தொழில் செய்பவர்களுக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும், என்று அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.