கேரள மாநிலம் செருப்லசேரி என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கட்சி அலுவலகத்திற்குள் இளம் பெண் நிர்வாகி 10 மாதமாக ரேப்! பிறந்த குழந்தையை தூக்கி வீசிய கொடூரம்!
கடந்த சனிக்கிழமை புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் தன்னை கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததால் தான கருவுற்றதாகத் தெரிவித்தார்.
குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் வீசியதாக அந்த பெண் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்புடையவர்கள் தான் என்று தெரியவந்தது.
10 மாதங்களுக்கு முன் கல்லூரில் இதழ் தயாரிப்பது தொடர்பாக அந்தப் பெண் மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்குச் சென்றதாகவும் அப்போது அங்கிருந்த மாணவர் அமைப்பை சேர்ந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதுபோன்ற சம்பவம் தங்கள் அலுவலகத்தில் நடைபெற்றதா என மார்க்சிஸ்ட் கட்சி விசாரணை நடத்திவரும் நிலையில், தொடர்புடைய நபரை போலீசார் இன்னும் கைது செய்து விசாரனை நடத்தவில்லை எனபுகார் எழுந்துள்ளது. பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் பாலியல் பலாத்கார மையங்களாகிவிட்டதாகவும், தற்போதைய அரசியல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதாலா குற்றம்சாட்டியுள்ளார்.