கேன்டீன் பிரியாணியில் புழு! பேண்டேஜ்! அதிர்ச்சியில் டெக்னோபார்க் ஊழியர்கள்!

உணவில் நாணயங்கள், புழுக்கள், பேண்ட் எய்டுகள் கலந்து கிடந்ததை கண்டித்து திருவனந்தபுரம் டெக்னோபார்க் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், டெக்னோபார்க் உள்ளது. இது நம்மூரில் உள்ள டைடல் பார்க் போல, தகவல்தொழில்நுட்ப பூங்காவாகும். இந்நிலையில், இங்கு செயல்பட்டு வரும் ரங்கோலி ரெஸ்டாரண்ட்டில், சாப்பிட சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆம், கடந்த சில நாட்களாக, உணவில் சரியான சுகாதாரம் இல்லை எனக் கூறப்படுகிறது.

சிக்கன் டிக்கா சாப்பிட கேட்டவருக்கு, அதில் புழுக்கள் கிடந்ததை பார்த்து வாந்தி வருவது போலாகிவிட்டது. இதேபோல, உணவில், சில்லறை காசுகள், கரப்பான் பூச்சிகள், போல்ட்டுகள், ரப்பர் பேண்ட்கள் சாதாரணமாக கிடப்பதை பார்த்து, டெக்னோபார்க் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் உச்சமாக, சிக்கன் பிரியாணி கேட்டு, வாங்கிச் சாப்பிட்ட ஒரு ஊழியர் அதில் லெக் பீஸ்க்கு பதிலாக, பேண்ட்எய்டு எனப்படும் காட்டன் பஞ்சு சுத்தப்பட்டு இருந்ததை பார்த்து திகைத்து போயுள்ளார்.

இதுபற்றி புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை எனக் கூறி, சமூக ஊடகங்களிலும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், நிர்வாகத்தினரிடம் தங்களது கண்டனத்தை ஊழியர்கள் அனைவரும் பதிவு செய்துள்ளனர். ஸ்விக்கி, உபெர் சேவையை தங்களுக்கு அனுமதித்தால் கூட இந்ததொல்லையில் இருந்து விடுதலை பெறுவோம் என்றும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.