செல்போன் என்றால் பெண்கள் அதற்கு தான் பயன்படுத்துவார்களா? போராடி வென்ற பாத்திமா ஷெரீன்! குவியும் பாராட்டு!

திருவனந்தபுரம்: ஹாஸ்டலில் மொபைல் ஃபோன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை வென்ற கேரள மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செல்லான்னுர் பகுதியில் எஸ்என் காலேஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு, பிஏ 2வது ஆண்டு படிக்கும் பாஹிமா ஷிரின் என்ற பெண், ஹாஸ்டலில் தடையை மீறி மொபைல் ஃபோன் பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டார்.

அதாவது, மாலை 6 மணி முதல் இரவு 10மணிவரை இந்த தடையை அனைவரும் பின்பற்ற வேண்டுமாம். மேலும், மாணவிகள் தமது மொபைல்ஃபோனை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையும் அங்கேஉள்ளது.  

இந்த தடையை மீறி மொபைல் பயன்படுத்திய பாஹிமா வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மாணவி வழக்கு தொடர்ந்தார். யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக, மாணவிகளை பாலின பாகுபாடு காட்டி, அவர்களது சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்த காலேஜ் நிர்வாகத்திற்கு, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாணவியை மீண்டும் ஹாஸ்டலில் சேர்த்து படிப்பை தொடர அனுமதிக்கும்படி காலேஜ் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  நீதிமன்றம் செப்டம்பர் 19ம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், இதுவரையிலும் சம்பந்தப்பட்ட காலேஜ் நிர்வாகம் எந்த பதிலும் மாணவி பாஹிமாவுக்கு தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுபற்றி வருத்தம் தெரிவிக்கும் பாஹிமா, என்ன ஆனாலும் சரி, விரைவில் ஹாஸ்டலில் சேர்ந்து, மீண்டும் படிப்பை தொடரப் போகிறேன், என சவால் விட்டுள்ளார்.