வாட்ஸ்ஆப்பில் கோளாறு! கண்டுபிடித்த இந்திய மாணவருக்கு அள்ளிக் கொடுத்த பேஸ்புக்!

உலக அளவில் சாமானியன் துவங்கி எல்லோருக்கும் பரீட்சையமானது பேஸ்புக் மற்றும் வாட்சப் செயலிகள்


 கேரள மாணவர் ஒருவர் வாட்சப்பில் பயனாளிகளுக்கும் தெரியாமல் நடக்கும் பாதுகாப்பற்ற நிகழ்வு குறித்து கண்டறிந்து  அந்த நிறுவனத்திற்கு தகவல் கொடுத்திருந்தார். மேலும் இதற்காக அவர் கவுரவிக்கவும் பட்டிருக்கிறார். கேரள மாநில பத்தினம் திட்டாவில் பொறியியல் படிப்பு படித்து வரும் 19 வயதே ஆனவர் அனந்த கிருஷ்ணன்.

இவர் தனது துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் தான் வாட்சப்பில் பக் என சொல்லப்படும்  பயனாளிகளுக்கும் தெரியாமல் மற்றொரு நபர் அவர்களது தரவுகளை கையாள முடியும் என்கிற தவறு இருப்பதை கண்டறிந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக வாட்சப்பின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்திற்க்கு அந்த தகவலை அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த கோளாறு சரி செய்யபட்டுள்ளதுடன் , மாணவர் அனந்த கிருஷ்ணாவை உற்சாகபடுத்த, ஊக்கத்தொகையாக  500 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 34,000) அளித்ததுடன் ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைத்தும் அவரைக் கௌரவப்படுத்தியிருக்கிறது.

அதேபோல், ஃபேஸ்புக் நிறுவனம் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றிருப்பதுடன் , கேரள போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் (Kerala Police Cyberdome) பிரிவிலும் 19 வயதே ஆன அனந்த கிருஷ்ணா அசத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.