அங்கிள் இதையும் வச்சிக்கோங்க! தங்க கம்மலையும் கழட்டி கொடுத்த லியனா! நெகிழ்ந்த முதலமைச்சர்!

திருவனந்தபுரம்: வெள்ள நிவாரண நிதிக்கு தனது உண்டியல் சேமிப்பு, தோடு உள்ளிட்டவற்றை முதல்வரிடம் கொடுத்த சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


கேரளாவில் மழை, வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில்வெள்ள சேதம் கடுமையாக இருப்பதால், அவற்றை சமாளிக்க வெள்ள நிவாரண நிதி திரட்டும்பணிகளில், கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், எர்ணாகுளம் டவுன் ஹாலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பினராயி விஜயன் காரில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை நிகழ்ச்சி பகுதிக்கு அருகே ஓடிவந்து சந்தித்த ஒரு சிறுமி, தனது உண்டியல் சேமிப்பு பணம் மற்றும் தோடு உள்ளிட்டவற்றை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகக் கூறி, பினராயி விஜயன் கையில் அளித்தார்.

இதனை பெரும் மகிழ்ச்சியுடன்வாங்கிக் கொண்ட பினராயி விஜயன், இதுபற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அந்த சிறுமியை பாராட்டியுள்ளார். 4ம் வகுப்பு படிக்கும் லியானா தேஜஸ் என்ற அச்சிறுமிக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.