துபாயில் போட்ட பிளான்..! குளுருதுனு சொன்ன குழந்தைகள்..! ஹீட்டரில் இருந்து வெளியான விஷவாயு..! 8 பேர் கொடூர மரணம்!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரவீன் நாயர் துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார். அவரது மனைவி சுகன்யா மற்றும் 3 குழந்தைகள் என குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகியுள்ளார்.


இந்த நிலையில் மனைவி சுகஞாவிற்க்கு கேரளா பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்க, அதனூடாக திருமண நாள் மற்றும் மகன்களின் பிறந்த நாள் என அனைத்தும் ஒன்றாக சேர, கேரளாவில் மகிழ்ச்சி ஆக குடும்பத்துடன் நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதாக கூறிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இதற்கிடையில் கேரளாவில் சுற்றுலாவை முடித்து கொண்டு நேபாளத்திற்க்கு சென்ற குடும்பத்தினர், அங்கு இரவு தங்கி விட்டு அடுத்த நாள் கிளம்ப திட்டமிட்டு, அருகில் ரெசார்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்த அறையில் இருந்த ஹீட்டர் பழுது காரணமாக விஷ வாயு வெளியாகி மூச்சு திணறல் காரணமாக அந்த குடும்பம் உட்பட அடுத்த அறையில் இருந்த குடும்பமும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

அடுத்த நாள் இரண்டு குடும்பத்தினரையும் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவ மனைக்கு ரெசார்ட் ஊழியர்கள் அழைத்து சென்றுள்ளனர். அதற்குள்ளாக அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பிரவீன் குடும்பத்தினர் உட்பட ,மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறார்கள்.