கர்ப்பதடை ஆப்பரேசன் செய்த இளம் தாய்க்கு அரங்கேறிய பயங்கரம்! தவிக்கும் குழந்தைகள்! தனிமையில் கணவன்!

கேரளா மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் செவிலியர் உயிரிழந்த நிலையில் மெத்தன சிகிச்சையே அவர் பலியானதற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


அபுதாபியில் செவிலியராக பணியாற்றி வந்த சந்தியா ஒரு மாத விடுமுறையில் கணவர் மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கேரள மாநிலம் வந்தார் இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்த அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ஆனால் சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார் மருத்துவமனையின் மெத்தன சிகிச்சையே இதற்கு காரணம் என கணவர் உறவினர்கள் குற்றம் சாட்டும் நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசம் அடைந்தது இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தே அவர் உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

ஆனால் அவருக்கு தாங்கள் சிகிச்சையை தொடங்கவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் ஓய்விலேயே இருந்ததாகவும் அவருக்கு சிகிச்சைக்கு முந்திய பரிசோதனைகளை மட்டுமே செய்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்பது உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் 7-ஆம் வகுப்பு மற்றும் 2-ஆம் வகுப்பு படிக்கும் சந்தியாவின் இரு மகன்களும் தாயை இழந்து தவித்து வருவது காண்போரின் கண்களை கசியச் செய்துள்ளது.