7 மாத கர்ப்பிணி திடீர் மரணம்! ஆசை நாயகியுடன் சேர்ந்து கணவன் கொடுத்த விநோத டார்ச்சர்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர்தான் குற்றவாளி என்ற கருதிய நிலையில் அவரின் கள்ளக்காதலியும் காரணம் என தெரியவந்துள்ளது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் பாலக்கோடு அருகே எருமையூரை சேர்ந்த பிஜு என்பவர் கூலித் தொழிலாளி இவரது மனைவி ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா 2 தினங்களுக்கு முன்ன திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்  வரதட்சினை கேட்டு பிஜி மனைவியை சித்ரவதை செய்ததாகவும் அவரது கொடுமை தாங்காமல்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தலைமறைவான பிஜூவை தேடிவந்தபோது அவர் திருப்பூரில் இருப்பதாக செல்போன் சிக்னல் போலீசாருக்கு காட்டிக் கொடுத்துவிட்டது.

பின்னர் திருப்பூர் சென்று பிஜூவை பிடித்து விசாரித்தபோது அவர் வேலை செய்த இடத்தில் மனோசாந்தி என்பவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளதும், மனோசாந்தி தூண்டுதலின் பேரில்தான் பிஜூ வரதட்சினை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்தியதும் தெரிய வந்துள்ளது.ஒரு கட்டத்தில் மனோசாந்தியே நேரிடையாக ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு வரதட்சினை கேட்டபோதுதான் கணவருக்கு கள்ளக்காதலி இருந்ததை அறிந்துகொண்டார் அந்த கர்ப்பிணி.

கணவருக்கு கள்ளக்காதலி இருந்தது தெரியவந்ததாலும், வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும் விரக்தியில் இருந்த 7 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் திருப்பூரில் தலைமறைவாக இருந்த பிஜூ அவரது கள்ளக்காதலி மனோசாந்தியை கைது செய்த கேரள மாநிலம் ஆலத்தூர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்