இந்தியாவில் வறுமையில் வாடிய இளம் பெண்! துபாய்க்கு வேலைக்கு சென்ற பரிதாபம்! ஆனால் அங்கு..? நெகிழ வைக்கும் சாதனை!

துபாயில் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை பெற்றதன் முலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை கிடைத்துள்ளது.


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுஜா தங்கச்சன் என்பவருக்கு சிறு வயது முதலே கனகர வாகனங்களை ஓட்டுவது ஆர்வமாக இருந்தது. அதற்கு காரணம் அவரது மாமா கேரள போக்குவரத்த கழகத்தில் பணியாற்றியதுதான். 

இதற்கிடையே குடுமை வறுமை காரணமாக கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று வேலை செய்யத் தொடங்கினார் சுஜா தங்கச்சன்.

அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பள்ளிப் பேருந்தில் நடத்துனர் வேலை கிடைத்தபோதும் எப்படியாவது கனகர வாகன ஓட்டுநர் ஆகிவிடவேண்டும் என முயற்சி செய்தார். இதற்காக 6 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். தோல்வியை கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் சுஜா. ஏழாவது முறை நடைபெற்ற தேர்வில் கனரக வாகன ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றார் சுஜா தங்கச்சன்.

தற்போது பணிபுரியும் பள்ளியிலேயே பள்ளிப் பேருந்துகளை ஓட்டி வருகிறார் சுஜா தங்கச்சன்.

பொதுவாக துபாயில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவது சுலபம் இல்லை. இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் பலமுறை ஆண்களே அதற்கான உரிமம் கிடைக்காமல் இருக்கின்றனர்.

ஆனாலும் விடா முயற்சியால் சுஜா தங்கச்சன் ஓட்டுநர் உரிமம் பெற்றதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.