ஆடல் பாடல் உற்சாகம்..! அசுர வேகத்தில் வந்த கார்! அந்தரத்தில் பறந்த பைக் இளைஞர்கள்! திருமண ஊர்வலத்தில் விபரீதம்!

கேரளா மாநிலத்தில் பைக்கில் திருமண ஊர்வலம் சென்ற இளைஞர்கள் சிலர் மீது கார் மோதியதில் படுகாயம் ஏற்பட்டுள்ளது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் அவரது நண்பர்கள் சிலர் பைக்கில் திருமண ஊர்வலம் செல்ல திட்டமிட்டு மண்டபத்தில் இருந்து மெயின் ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

ஒரே பைக்கில் 3 பேர் சென்றதோடு மட்டுமல்லாமல், ஹெல்மெட் அணியாமல் சென்று இருக்கின்றனர். இவர்கள் மெயின்ரோடு நோக்கி வந்தபோது, திடீரென கார் இவர்கள் பைக் மீது மோதியதில் சில இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளதுள்ளனர். அவர்களுக்கு என்னவாயிற்று என தெளிவாக தெரியவில்லை. 

ஆனால் பலத்த அடிபட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த பைக் விபத்து குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.  

திருமண விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் இதுபோன்று இளைஞர்கள் சேஷ்டைகளில் ஈடுபடுவதால், விபரீதமாக சென்று முடிய பல வாய்ப்புகள் இருப்பதை அறியாமல் இருக்கின்றனர்.  

இளைஞர்கள் சிறு சந்தோஷத்திற்காக இதனை செய்கின்றனர். ஆனால், அதற்கான விளைவுகளை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.