வளர்ப்பு நாயின் நடத்தையில் சந்தேகம்! செல்லமாக வளர்த்த ஓனர் அரங்கேற்றிய விபரீதம்!

கேரள மாநிலத்தில் ஆசையாக வளர்த்த பொமரேனியன் நாய் பக்கத்து வீட்டு நாயுடன் தவறான தொடர்பை வளர்த்துக் கொண்டதால் அதனை அனாதையாக தெருவில் விட்ட அதன் உரிமையாளர் அந்த நாயின் கழுத்தில் அது அனாதையாக விடப்பட்ட காரணத்தையும் எழுதித் தொங்க விட்டார்.


சக்காய் என்ற இடத்தில் ஒரு சந்தையின் அருகே அனாதையாக நின்று கொண்டிருந்த ஒரு பொமரேனியன் நாயைக் கண்ட சிலர் விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர். அதை அடுத்து அங்கு வந்த அவர்கள் அந்த நாயை மீட்டு அழைத்துச் சென்றனர். அந்த நாய் அழகாக இருந்ததால் வேறு ஒருவர் அதனை தத்தெடுத்துக் கொண்டார்.

எனினும் அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த அட்டை ஒன்றில் இருந்த விவரம் விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அதில் இது நல்ல நாய் நல்ல பழக்கங்களை உடையது என்றும் அதிக உணவு கேட்டு தொந்தரவு செய்வதில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு உடல் நலக்குறைவு ஏதுமில்லை என்றும்,ஐந்து நாட்களுக்கு ஒருமுறை முறையாக குளிப்பாட்ட படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இது யாரையும் பார்த்து குறைப்பதோ கடிப்பது இல்லை என்றும், பால் பிஸ்கட் முட்டை மட்டுமே சாப்பிடும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது எனினும் பிரச்சினைக்குரிய வரி என்னவென்றால் அது பக்கத்து வீட்டு நாயுடன் தவறான தொடர்பை வளர்த்துக் கொண்டதால் அதனை வீட்டை விட்டு வெளியேற்றியதாக அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்தது.

இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அது நாலு கால் பிராணி என்பதால் அதற்கு உணர்வுகள் இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்புகின்றனர் ? அந்த நாயை வேறு ஒருவர் தத்து எடுத்து சிறப்பாக பராமரித்து வந்தாலும் தனது முன்னாள் உரிமையாளர் வந்து தன்னை அழைத்துச் சென்று விட மாட்டாரா என பரிதாபத்துக்குரிய அந்தப் பிராணி தெருவையே பார்த்துக் கொண்டிருப்பதாக பிராணிகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.