கடல் கடந்து கெத்து காட்டிய பெண் சிங்கம்! சிறுமியை சீரழித்தவனை சவூதியில் போய் தூக்கிய தெறி சம்பவம்! சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு!

சிறுமிக்கு கதறக் கதற 3 மாதங்கள் நேர்ந்த கொடூரம்; சவூதிக்கு சென்று பாவியை கைது செய்த பெண் காவல் ஆணையர்


கேரள மாநிலம் கொல்லத்தில் 13 வயதுச்  சிறுமியை 3 மாநிலங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சவூதிக்கு தப்பியோடியவனை கொல்லம் பெண் காவல் ஆணையர்  மரீன் சவூதிக்கே சென்று கைது செய்து அழைத்து வந்தார். 

கொல்லத்தைச் சேர்ந்த சுனில் குமார் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு அவன் விடுமுறையில் கொல்லத்துக்கு வந்த அவனுக்கு, அவனது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தனது உறவினர் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை அவன் 3 மாதங்கள் வலுக்கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தச் சிறுமி தைரியத்தை வரவழைத்துக்க்கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த போது அவன் சவூதிக்கே தப்பிச் சென்றிருந்தான்.

இது தொடர்பாக அந்தக் குடும்பத்தினர் கொல்லம் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அவனை கேரளாவுக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் செல்லுபடியாகாத நிலையில் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. 

இந்நிலையில் கொல்லத்துக்கு காவல் ஆணையராக வந்த மரீன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை தூசி தட்டி எடுக்கத் தொடங்கினார். 13 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அவரை ஆத்திரமடையச் செய்ய சுனில்குமாரை கைது செய்தே தீர்வது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார். 

இதையடுத்து சி.பி.ஐ., சர்வதேச போலீசார், சவூதி போலீசார் என பல்வேறு துறையினரை தொடர்புகொண்டு ஆவண நடைமுறைகளை முடித்தார். இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தனது குழுவினருடன் சென்ற அவர் அந்நாட்டுப் போலீசாரின் உதவியுடன் சுனிலை வளைத்துப் பிடித்தார்.