முதலில் மனைவி! பிறகு மகள்! கொடூரமாக கொன்றேன்! மகனை...! 2வது கணவனின் பகீர் வாக்குமூலம்!

சொத்துக்களை அபகரிக்கவும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும் கேரளாவில் பெண் ஒருவர் 6 கொலைகளை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


கேரள மாநிலத்தையே பரபரப்பாக பேசவைத்த 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோலி என்ற பெண்ணின் கள்ளக் காதலன் சாஜூ பல திடுக்கிடும் தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஜோலியுடன் திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்ததால் மனைவி மற்றும் ஒரு குழந்தையை கொலை செய்ய உதவியதாக தெரிவித்தார்.

தன்னுடைய மூத்த மகனையும் கொன்றுவிடலாம் என ஜோலி கூறியதாகவும் ஆனால் தான் தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். முதலில் இந்த குற்றங்களை சாஜூ கூற மறுத்துள்ளார். ஆனால் போலீசாரின் வழக்கமான விசாரணையில் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.

இந்த மரணங்கள் எதுவுமே இயற்கையாக நடந்தது இல்லை. எல்லாவற்றிற்கும் ஜோலிதான் காரணம் என கூறிய சாஜூ இதை போலீசாரிடம் தெரிவித்தால் தன்னையும் கொன்றுவிடுவார் என்ற பயத்தில்தான் வெளியில் சொல்லாமல் இருந்ததாக கூறினார்.

மேலும் சயனைடு கொடுத்து குடும்ப உறுப்பினர்களை ஜோலி கொன்றுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சாஜூ போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கொலை செய்வதற்கு சயனைடு கொடுத்து உதவி செய்தவர்களுக்கும், ஜோலிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்திட போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.