தாயின் மார்பிலேயே கடைசி நிமிடங்கள்! துடித்துப்போன வினாடிகள்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்! கடவுளின் தேசத்தில் துயரம்!

கேரள மாநிலத்தில் தொடர் கன மழைக்காரணமாக் ஆங்காகே வெள்ளப்பெருக்கும் பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழும்அளவிற்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.


அதீத நீர் வரத்தின் காரணமாக அணையில் இருந்து நீர் வெளியேறுவது பெரும் ஆக்ரோஷமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் பாடிற்க்கு உள்ளாகியுள்ளனர்.

ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் வயநாடு பகுதியில் திடீர் என ஏற்ப்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், இதற்கிடையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்.

கீது தனது ஒரு வயதே ஆன குழந்தையை மார்போடு அணைத்தபடி இறந்த நிலையில் மீட்க பட்டபோது, சம்மந்த பட்டவர்கள் மட்டும் அல்ல, அனைவரது மனதை உருக செய்தது. கணவர் சரத் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய நிலையில் மனைவி கீது மற்றும் மகன் துருவன் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது