பைக்கில் படுவேகம்! சுவற்றில் மோதல்! ஹெல்மெட்டால் நிகழ்ந்த அதிஷ்டம்! வைரல் வீடியோ உள்ளே!!

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இருந்த கேரளா போலீஸ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கில் படு வைரலாகி வருகிறது.


தற்போது தமிழகம் முழுதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டாலும், ஆங்காங்கே மக்கள் அதை மீறிக்கொண்டு தான் உள்ளனர். சிலர் போலீசார் இருக்கும் பகுதிகளில் மட்டும் போட்டுகொண்டு மற்ற பகுதிகளில் கழட்டி விடுகின்றனர். 

மேலும், சிலர் முடி கொட்டும்  என்ற அற்ப காரணங்களுக்காக தவிர்க்கின்றனர். இதனால், உயிரையே இழக்கும் அளவிற்கு செல்ல நேர்கிறது என்பதை உணர்வதில்லை.

இதனை உணர்த்தும் விதமாக தான் கேரளா அரசு போலீஸ் அண்மையில், அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வண்டி ஓட்டும் ஒருவர் நேரடியாக சுவற்றில் மோதுவது போலவும், ஆனால், இந்த அளவிற்கு ஆபத்து நேர்ந்த போதும் அவர் ஹெல்மெட் அணிந்ததால் எவ்வித ஆபத்தும் இன்றி உயிருடன் வருவது போல இருந்தது.

இது தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. https://twitter.com/TheKeralaPolice/status/1129613404367310848?s=19