ராஜா ராணி படத்தில் நஸ்ரியாவுக்கு நடந்தது போலவே கோர விபத்து - _ இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம் -_ வைரலாகும் வீடியோ

சினிமாவில் கற்பனையாக பார்க்கும் காட்சியை நேரில் பார்ப்பது போன்ற சம்பவம் நடந்துள்ளது.. அந்த வீடியோ இப்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.


கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். அந்த பெண் சாலையின் இருபுறமும் சரியாக கவனிக்காமல் சாலையை கடக்க வேகமாக வந்த வாகனம் ஒன்று அந்த பெண் மீது மோதுகிறது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் தூக்கி வீசப்படுகிறார். 

இதனை சாலையின் மறுபுறம் இருந்த நபர் தற்செயலாக ஒருவர் வீடியோ எடுத்திருக்க, அந்தக் காட்சி வைரலாக வெளியாகியுள்ளது..

இதே போன்றுதான்  ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சாலை கடக்கும் போது இறந்துவிடுவார். இதே போல்தான் இந்த பெண்ணும் சாலையைக் கடந்து மரணத்தைத் தழுவியிருக்கிறார்.

 இந்த வீடியோவை இதயம் பலவீனமானவர்கள் பார்க்காமல் இருப்பது நலம்.