அப்துல் ரஹீம் - நிவேத் விரைவில் ஓர் பாலின திருமணம்! ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் வைரல்!

கேரள மாநிலத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இவர்களது "ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்" புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கேரள மாநிலத்தில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் அவர்களது நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இரண்டாவதாக நடைபெறவிருக்கும் ஒரு பாலின திருமணமாகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 377 இப்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த உடலுறவு கொள்வதும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும் இந்நிலையில் இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலையில் அதை விசாரித்த நீதிபதிகள் குழு ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஒரு உறவு கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் குற்றமில்லை என அறிவித்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு ஆகியோர் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். இதையடுத்து அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல்வேறு எதிர்ப்பையும் கடந்து அவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவர்கள் இருவரின் திருமணமானது கேரளாவில் நடைபெற்ற முதல் ஓர்பால் திருமணம் ஆகும். இந்நிலையில் இரண்டாவதாக கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு இருவரின் பெற்றோர்களும் ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது.

அவர்களின் எதிர்ப்பை மீறியும் தாங்கள் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பேசிய நிவேத் ஆண்டனி மற்றும் அப்துல் ரெஹிம்,மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் எங்களின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்தோம். என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்துல் ரஹீம் வீட்டில் யாரும் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் அவர்கள் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். இதையடுத்து நிவேத் தரப்பிலிருந்து அவரது தாய் மற்றும் தங்கை ஆகிய இருவரும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார் இதையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. விரைவில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாகம் தெரிவித்துள்ளனர்.